வில்லியம் பிரான்ஹாமின் தரிசனங்கள் Visions Of William Branham ஜெபர்ஸன்வில், இண்டியானா, அமெரிக்கா 60-09-30 1 .இந்த ஒலிநாடாவானது, தேவனுடைய இராஜ்யத்திற்கென்று சகோ.லீவேயில் இடம் கையெழுத்து பிரதிக்காக என்னால் அளிக்கப்படுகிறது. சகோ.வேயில் சென்ற காலத்தைய தரிசனங்களில் சிலவற்றை இங்கே சகோ.மெர்சியர் முன்னிலையில் நான் கொடுக்கும்படி என்னிடம் கேட்டிருந்தார். நிச்சயமாகவே, தரிசனங்கள்... நான்... நான் நினைவு கூரக்கூடிய முதலாவது காரியங்களில் ஒன்று தரிசனங்கள் வருவதாயிருக்கிறது. தரிசனங்கள் எல்லா நேரங்களிலும் வருகின்றன. ஆனால், சகோ.வேயில், என்னுடைய மனந்திரும்புதலுக்குப் பிற்பாடு, நீங்கள் அதில் ஆர்வமுடையவராய் இருந்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். 2. நல்லது, நான் நினைவு கூருகிறேன், இங்கே ஜெபர்ஸன்வில்லிலுள்ள வாட் தெருவில் அமைந்திருந்த பாப்டிஸ்ட் சபையில், டாக்டர். ராய் டேவிஸ் அவர்களால் நான் நியமனம் செய்யப்பட்ட பிறகு, (அந்த சபை அந்த நேரத்தில் அங்கு தான் இருந்தது). ஒரு குறிப்பிடத்தக்க தரிசனத்தை நான் நினைவு கூருகிறேன். என் நியமனத்திற்கு பிறகு ஒரு சில வாரங்கள் கூட ஆகி இருக்கவில்லை... என் நியமனத்திற்குப் பிறகு ஒரு சில நாட்கள் தான் ஆகியிருந்தன என்று நான் கூற முடியும். நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். ஒரு வயதான மனிதன் கூழாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு இருந்தான். அவன் ஒரு கறுப்பின மனிதனாயிருந்தான். மேலும் அவன் உடனடியாக சுகமடைந்தான், அது அதிக குழப்பத்திற்கு காரணமாகியது. அவன் படுக்கையை விட்டு எழுந்து வெளியில் நடந்தான். 3. ஏறக்குறைய இரண்டு நாட்கள் கழித்து, நான் நியூ-ஆல்பெனியில் நடந்த ஆராதனைகளை நிறுத்தினேன், (தண்ணீர், வாயு, மற்றும் மின் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியிராத ஆராதனைகள்). மேலும் அது... நான் அதிக சந்தோஷத்தால் நிரம்பி இருந்தேன்-! ஒவ்வொரு தடவையும் நான் ஒரு பழைய வீட்டை கண்டு பிடித்த போது, நான் அப்படியே உள்ளே சென்று ஜெபித்தேன், நீங்கள் அறிவீர்கள், அங்கே யாரும் வசிக்கவில்லை. 4. நான் திரு. ஜோனி பாட்ஸிடம் (Mr. Johnny Potts) கூறினதை நினைவு கூருகிறேன், அவர் இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு 70 அல்லது 80 வயடு இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். அவர் ஒரு வயதான பயனீட்டு குறியாளர் (meter reader). பிறகு அவர்கள் அவரை மின் பயனீட்டு குறித்தலில் இருந்து மாற்றி மேசையில் அவரை இருத்தி, புகார் மற்றும் காரியங்களை கவனிக்கும்படி செய்தனர், நீங்கள் வாசலுக்குள் நுழைந்து, வாடிக்கையாளர் சேவை தொலைபேசி எண்களை அழைக்கலாம். கர்த்தர் என்னிடம் காட்டினதை நான் அவரிடம் கூறிக் கொண்டு இருந்தேன். சாதாரண மனிதன் பெற்றிராத விட்டு விட்டு வேலை செய்கிற ஒரு சில மின்பயனீட்டு கருவிகளை ஒரு தடவை அவர் பெற்றுக் கொண்டு இருக்கிறார். இதில், அவர் - அவர் ஒரு மனிதரைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்... 5. நான் அந்த செய்தித்தாளில் பார்த்திருந்தேன், அங்கு தான் அவர்கள் குதிரைகள் இழுத்துச் செல்லும் ஒரு நான்கு சக்கர பழைய பார வண்டியைக் கொண்டு இருந்தனர்... அந்த நாட்களில் இரண்டு குதிரைகளை ஓட்டினார்கள், அவைகள் தோட்டப் பாதையில் குப்பைக் கூளங்களை எடுத்துக் கொண்டு சென்றன. அங்கே திரு.எட்வர்ட் ஜே.மெர்ரல் என்னும் பெயர் கொண்ட ஒரு வயதான நீக்ரோ மனிதர் இருந்தார். அவர் நியூ-ஆல்பெனியிலுள்ள 1020 கிளார்க் தெருவில் வசித்து வந்தார். ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வெள்ளைகாரப் பெண் மற்றும் ஒரு வெள்ளைக்ககார பையன் ஆகிய இரண்டு வெள்ளையர்களால் இடிக்கப்பட்டிருந்தார். கார் கட்டுப்பாட்டை இழந்து, அந்த நான்கு சக்கர பார வண்டியின் சக்கரத்திற்குள் அவர் கூழாக்கப்பட்டார். அது அப்படியே அவருடைய சரீரத்தின் அனைத்து எலும்புகளையும் கூழாக்கிப் போட்டது, குறிப்பாக அவருடைய மார்பு பகுதி வழியாக. அவருடைய முதுகு அடித்து நொறுக்கப்பட்டது. அவர்கள் அவரை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். 6. திரு.பாட்ஸ் அவர்கள் நியூ ஆல்பெனியிலுள்ள அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து, கர்த்தர் என்னுடன் இடைபட்டு கொண்டு இருப்பதைக் குறித்து அவரிடம் கூறியிருந்தார். நான் வந்து அவருக்காக ஜெபிக்கும்படி என்னிடம் (தகவல்) அனுப்பி இருந்தார். உடனடியாக, "இந்த தரிசனத்தில் நான் கண்டுள்ள அதே மனிதர்,” என்று நான் நினைத்தேன். 7. எனவே நான் போவதற்கு சிறிது பயமடைந்தேன், ஏனெனில் அதைப் போன்று செல்வது என்னுடைய முதலாவது காரியங்களுள் ஒன்றாய் இருந்தது, நீங்கள் பாருங்கள். எனவே, எப்படியாயினும் அப்பொழுது தான் மனந்திரும்பியிருந்த என்னுடைய நண்பரான ஜார்ஜ டி.ஆர்க் என்றழைக்கப்பட்ட ஒரு சிறு பிரெஞ்சு பையனை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். நான் அப்பொழுது தான் அவரை கிறிஸ்துவிடம் வழிநடத்தி இருந்தேன். நாங்கள் அங்கு சென்றோம். மேலும் நான், "இப்பொழுது, சகோ.ஜார்ஜ், நீ நினைவு கூரும்படி நான் விரும்புகிறேன். எனக்கு சம்பவித்த இந்த காரியங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த மனிதர் சுகமடையப் போகிறார் என்பதை நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். மேலும் அவர் சுகமடையும் போது அங்கே... இரண்டு வெள்ளைக்கார ஜனங்கள் வந்து, படுக்கையின் மற்ற பக்கத்தில் நிற்க வேண்டும். அது வரை நான் அவருக்காக ஜெபிக்க முடியாது, ஏனெனில் எனக்குக் காண்பிக்கப்பட்ட அதே வழியில் நான் அதைச் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்,” என்றேன். 8. நான் மருத்துவமனைக்குள் சென்று, திரு.மெர்ரல் குறித்து விசாரித்தேன். நான் அங்கு சென்றேன், அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவருடைய மனைவி என்னிடம் கூறினாள். அவரால் அசையக் கூட முடியவில்லை. ஏனெனில் இந்த எலும்புகளில் சில நுரையீரலுக்கு வலது பக்கத்தில் கிடப்பதாக எக்ஸ்ரேக்கள் காட்டியிருந்தது. அவர் அசைந்தால்கூட, அது அவருடைய நுரையீரல்களைக் கிழித்து, இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் வடிய செய்து அவர் மரணமடைய காரணமாகும். அவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவருடைய தொண்டையிலும் மற்றவைகளிலும் உள்ள இரத்தக் குழாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டு இருந்தது, இதனால் அவருடைய வாயைச் சுற்றிலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர் ஏறெக்குறைய இரண்டு நாட்களாக அங்கே படுக்கையில் படுத்திருந்தார். அந்த மனிதர் அந்த நேரத்தில் ஏறக்குறைய 65 வயதுடையவராய் இருந்தார், 60 அல்லது 65 என்று நான் ஊகிக்கிறேன். வயதான மனிதர், அவருடைய நீளமான மீசை நரைத்து விட்டிருந்தது. அவருடைய தலைமுடியும் நரைத்திருந்தது. 9. நான் உள்ளே சென்று, நான் கர்த்தரிடமிருந்து கண்டிருந்த தரிசனத்தை அந்த மனிதரிடம் கூறினேன். அவரை இடித்துப் போட்ட அந்த வாலிப ஜனங்கள் (இரண்டு வெள்ளைக்கார ஜனங்கள் - தமிழாக்கியோன்) உள்ளே வந்தனர். நான் அவருக்காக ஜெபிக்கும்படி முழுங்கால் படியிட்டேன். இந்த மனிதன் திடீரென்று "நான் சுகமானேன்,” என்று கூறி, கூச்சலிட்டு துள்ளிக் குதித்தார். அவருடைய மனைவியோ அவரை திரும்ப படுக்கையில் கிடத்த முயற்சித்துக் கொண்டு இருந்தாள். துணை மருத்துவர்களில் ஒருவரும் வந்து, அவரை படுக்கையில் கிடத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டதன் காரணத்தால் அவர் படுக்கையை விட்டு வெளியே குதித்தார். மேலும் நான் சென்ற போது... நான் சகோதரன் ஜார்ஜிடம் கூறினேன். 10. அது ஒரு கத்தோலிக்க மருத்துவமனையாக இருந்தது, பிறகு அந்த சகோதரிகளில் ஒருவர் உள்ளே வந்து, நான் அங்கேயிருந்து வெளியே போகும்படி என்னிடம் கூறினாள். ஏனெனில் அந்த மனிதர் உணர்ச்சியால் தூண்டப்பட்டு படுக்கையை விட்டு எழுந்தார். மேலும் அவருக்கு ஏறக்குறைய நூற்று நான்கு டிகிரியில் காய்ச்சலும் இருந்தது. அவர்கள் அவரை மீண்டும் படுக்கையில் கிடத்த முயன்றனர். விசித்திரமான காரியம். பாதிரியாரும் மருத்துவர்களில் சிலரும் அவர் சென்று திரும்ப படுக்கையில் கிடக்கும்படி செய்தனர். ஏனெனில் அவர் தன்னுடைய உடைகளை அணிந்து கொண்டிருந்தார். அவர்கள் அவருடைய உடல் வெப்ப நிலையை அளந்த போது, அவர் காய்ச்சலுக்கான எந்த வெப்ப நிலையையும் கொண்டிருக்கவில்லை. 11. இப்பொழுது, அந்த தரிசனத்தைக் கண்டு, அது சம்பவிப்பதையும் கண்டு அல்லது அதைக் குறித்து அறிந்துள்ள அனேக ஜனங்கள் இன்றும் ஜீவித்துக் கொண்டு இருக்கிறார்கள். 12. நான் வெளியே சென்று, படிக்கட்டுகளில் நின்றவாறே சகோதரர் ஜார்ஜிடம், “இப்பொழுது, நீங்கள் கவனித்துக் கொண்டிருங்கள். அவர் ஒரு பழுப்பு நிற மேற் சட்டையும் (coat) ஒரு அடைப்புத் (plug) தொப்பியும் அணிந்து, இன்னும் ஒரு சில நிமிடங்களில் சரியாக இந்த படிக்கட்டுகளில் நடக்கப் போகிறார்,” என்றேன். அவர் உண்மையாகவே அப்படிச் செய்தார். அவர் வெளியே வந்து, சரியாக அவ்விடத்தில் கீழே நடந்தார். 13. ஏறக்குறைய ஒரு இரவுக்குப் பிறகு, ஒரு நாள் காலை நேரத்தில் அந்த நாளின் உதயத்திற்குப் பிறகு, கர்த்தர் மீண்டும் என்னிடம் தோன்றி, பயங்கரமாக ஊனமுற்றிருந்த ஒரு ஸ்திரீ, சுகமடையப் போகிறதை என்னிடம் காட்டினார். எனவே நான், “நல்லது, நான் அனேகமாக அவள் எங்கிருக்கிறாள் என்பதைக் கண்டு பிடித்து விடுவேன்,” என்றேன். 14. நான் சென்று தண்ணீர் பாய்வதை சிறிது நிறுத்தினேன். அது நியூ ஆல்பெனியிலுள்ள எட்டாவது தெருவைச் சுற்றிலும் என்று நான் நம்புகிறேன். நான்... அது இரண்டு குடியிருப்பு பகுதிகளாக இருந்தது, நான் இரண்டு பக்கங்களையும் அடைத்து விட்டதைக் குறித்து பயமடைந்தேன். ஒரு பக்கத்தில் ஜனங்கள் சென்று கெண்டு இருந்தனர், மற்ற பக்கத்திலும் ஜனங்கள் இருந்தனர். எனவே நான் ஜனங்கள் கூடியிருந்த பகுதிக்குச் சென்றேன். நான் அந்தக் கதவைத் தட்டினேன். அவர்கள் உண்மையாகவே ஏழை ஜனங்களாக இருந்தனர். ஒரு கவர்ச்சியான வாலிப பெண் கதவினிடம் வந்தாள். அவள் ஏழ்மையாக உடை உடுத்தியிருந்தாள். அவள் - அவள், "உங்களுக்கு என்ன வேண்டும்-?” என்றாள். நான், "தண்ணீர் வருவது நின்று விட்டதா என்று பார்த்து சொல்லுவீர்களா-?” என்று கேட்டேன். 15. அவள், “சரி, ஐயா” என்றாள். அவள் சென்று பார்த்தாள். அவள், "இல்லை. தண்ணீர் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது,” என்றாள். நான், "உங்களுக்கு நன்றி,” என்றேன். 16. மேலும் அவளுடைய தாய் படுக்கையில் கிடந்தாள், அவளுடைய பெயர் திருமதி.மேரி டெர் ஒஹானியன். மேலும் அவள் ஆர்மேனியனாக இருந்தாள். அவளுடைய பையன் நியூ-ஆல்பெனியிலுள்ள கால்பந்து விளையாட்டு குழுவில் இணைந்து விளையாடுகிறவன், அப்படித் தான் என்று நான் நம்புகிறேன். அவளுடைய மகள் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய பெயர் டாரதி. மேலும் அவள் சொன்னாள். டாரதி என்னிடம், "இங்கேயுள்ள இந்த மருத்துவமனையில் அன்றொரு நாளில் அந்த சுகமாக்குதலை செய்த அந்த தேவனுடைய மனுஷன் நீர் தானா-? என் தாய் உம்மிடம் பேச விரும்புகிறாள்,” என்றாள். நான் உள்ளே சென்றேன். 17. அவள், தான் ஊனமுற்றவளாய் கிடக்கிறதாக என்னிடம் கூறினாள். (அவள் உடைய மகளான) இந்தப் பெண் பிறந்ததிலிருந்து, அவள் 17 வருஷங்களாக, படுக்கையில் கிடக்கின்றாள். எனவே அந்தப் பெண்ணுக்கு 17 வயதாக இருந்தது. எனவே நான் அவளிடம் கூறினேன்... அவள், "அந்த மனிதனை சுகப்படுத்திய தேவனுடைய மனுஷன் நீர் தானா-?” என்றாள். 18. நான், "இல்லை, சீமாட்டியே. நான் ஒரு சுகப்படுத்துபவன் அல்ல. நான் அப்படியே என்னிடம் கூறின ஏதோவொன்றின் மூலம் காண்பிக்கப்பட்ட அந்த வியாதிப்பட்ட மனிதனுக்காக ஜெபிக்க மாத்திரம் செய்தேன்,” என்றேன். அதை எப்படி அழைப்பதென்று நான் அறிந்திருக்கவில்லை; ஒரு தரிசனமா அல்லது என்னவென்று. இருப்பினும் அது என்னவென்று நான் அறிந்து இருக்கவில்லை. நான் அப்படியே ஒரு சிறு பையனாகவும் விவாகம் ஆகாதவனும் மற்றும் அதைப் போன்றும் இருந்தேன். எனவே அங்கே ஒரு... அந்த ஸ்திரீ தனக்காக ஜெபிக்கும்படி என்னிடம் கேட்டாள். நான் அவளிடம், "நான் முதலில் ஜெபிக்கிறேன். கர்த்தர் திரும்பவும் அது என்னிடம் வரும்படி செய்வாரானால்,” என்று கூறினேன். 19. பிறகு நான் ஜெபிப்பதற்கு சென்ற போது... சகோ.ஜார்ஜ் என்னுடன் வந்து இருந்தார். "நான் ஜெபித்திருந்தேன் என்று நான் உங்களிடம் கூறிக் கொண்டு இருந்த அந்த ஸ்திரீ இவள் தான். அது அதே ஸ்திரீ தான் என்று நான் அறிவேன். என்னுடன் வாருங்கள்,” என்று நான் கூறினேன். 20. நாங்கள் ஜெபிக்கும்படி அங்கே சென்றோம். எனவே இந்த சிறு 17-வயது பெண், நானும் அப்படியே ஒரு வாலிப பையனாக இருந்தேன். அவள் 6, 8 வயது அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றை உடைய ஒரு சகோதரனைக் கொண்டு இருந்தாள். அங்கே ஒரு கிறிஸ்துமஸ் மரம் வீட்டில் நின்று கொண்டு இருந்தது, அது சரியாக கிறிஸ்துமஸ்க்குப் பிறகு. தங்களுடைய தாயை எப்படி சுகப்படுத்துவார் என்று நினைத்து என்னைப் பார்த்து பரிகாசமாய் நகைக்கும்படி அவர்கள் வந்து அந்த கிறிஸ்துமஸ் மரத்திற்குப் பின்னர் நின்றிருந்தனர். கர்த்தர் அவளை சுகமாக்கப் போகிறார் என்று நான் அவளிடம் கூறினேன். மேலும் நான்... சகோ.ஜார்ஜ்-ம் நானும் ஜெபிக்கும்படி சென்றோம். 21. நல்லது, நான் ஜெபிக்கத் தொடங்கின போது, நான் கண்டதும் நீங்கள் அந்த படத்தில் பார்க்கிறதுமான அந்த தூதனானவர், அந்தப் படுக்கையின் மீது தொங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நல்லது, நான் அங்கு சென்று அவளுடைய கரத்தைப் பிடித்து தூக்கினேன். நான், "திருமதி.ஒஹானியன்,” என்றேன். இப்பொழுது, அவள் சரியாக இப்பொழுது நியூ ஆல்பெனியில் வசிக்கிறாள், அவளும், அவளுடைய கணவரும் குடும்பமும். மேலும் நான், "திருமதி.ஒஹானியன். கர்த்தராகிய இயேசு என்னை அனுப்பி, உங்களுக்காக ஜெபிக்கவும், “நீங்கள் சுகமடையப் போகிறீர்கள்,” என்றும் இங்கு வருவதற்கு முன்பாக என்னிடம் கூறினார். இயேசுவின் நாமத்தில், உங்கள் கால்களில் எழும்பி நின்று சுகமடைவீர்களாக,” என்றேன். அவளுடைய கால்கள் கீழாக இழுக்கப்பட்டிருந்தது. அவள் தன்னுடைய ஆர்மீனிய வேதாகமத்தை தன் இருதயத்தின் மேல் பிடித்தவளாய், படுக்கையின் பக்கத்தை நோக்கி அசைந்து வரத் துவங்கினாள். அவள் அப்படிச் செய்த போது, அவள்..... 22. பிறகு சாத்தான் என்னிடம் பேசினான், "அவள் அந்தப் பெரிய படுக்கையை விட்டு கீழே தரையில் விழுந்து அவளுடைய கழுத்து உடையும்படி நீ செய்யப் போகிறாய்,” என்றான். நான் சிறிது நேரம் பயமடைந்தவனாய் காணப்பட்டேன். 23. நான் அந்த தரிசனங்களாகிய அவைகள் என்னவென்பதை எப்பொழுதும் அறிந்திருந்தேன், அப்போது அது என்னவென்பதை நான் அறிந்திருக்கவில்லை, அது எப்பொழுதும் என்னிடம் சரியாகத் தான் கூறப்பட்டு வந்தது. எனவே எப்படியாயினும் நான் முன்னோக்கிச் சென்று, அவள் அந்தப் படுக்கையை விட்டு வரச் செய்தேன். தேவன் என்னுடைய சாட்சியாக இருக்கிறார், அவள் அவ்வாறு செய்யத் தொடங்கினவுடனே அந்தப் படுக்கையிலிருந்து குதித்தாள், அவளுடைய இரண்டு கால்களும் நேராக ஆனது. அவளுடைய மகள் அலறிச் சத்தமிட்டாள், தன்னுடைய தலை மயிரை பிரித்துப் போட்டவாறு வெளியே ஓடி, தன்னால் எவ்வளவு சத்தமிட முடியுமோ அவ்வளவு சத்தமிட்டாள். பக்கத்து வீட்டார் எல்லா இடங்களில் இருந்தும் வந்தனர். அங்கே அவள், 17 வருடங்களில் முதல் தடவையாக, தேவனைத் துதித்தவாறே அந்த அறையில் சுற்றிலும் நடந்து கொண்டு இருந்தாள். நான் உடனடியாக அதை விட்டுச் சென்றேன். 24. அதற்குப் பிறகு, நான் இந்த வாலிப பெண்ணுடன் பழகி அவளுடன் சென்றேன். இது ஒலிநாடா பதிவில் இருக்க வேண்டியதில்லை, ஆனால் நான் அந்த வாலிப பெண்ணுடன் சென்றேன். 25. அதற்குப் பிறகு அதிக நாட்கள் ஆகவில்லை, ஒரு சில வாரங்களில், நான் என்னுடைய தாயின் வீட்டில் ஒரு மாலை நேரத்தில் இருந்தேன். நான் அந்த நாளில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். என் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் வரை என்னால் ஜெபத்தை விட முடியவில்லை. மேலும் நான் நினைத்தேன், நான் அப்படியே ஜெபத்தில் தரித்திருந்தேன். நீங்கள் அறிவீர்கள், நேராக படுக்கைக்குச் சென்றேன். நான் அந்த நேரத்தில் வீட்டில் தங்கி இருந்தேன். எனவே நான் ஜெபிக்கும்படி அறைக்குள் சென்றேன். நான்... அது காலை சுமார் ஒரு மணி அளவில் என்று நான் ஊகிக்கிறேன். நான்- நான் ஜெபித்தேன். 26. நான் எல்லாவற்றையும் ஒருமுறை நோக்கிப் பார்த்தேன். என்னுடைய தாய் அவர்களுடைய உடைகளை தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தும்படி ஒரு இருக்கையில் உடைகளை அப்படியே குவித்து வைத்திருந்தார்கள், நீங்கள் அறிவீர்கள். நாங்கள் உண்மையிலேயே ஏழை ஜனங்களாய் இருந்தோம். ஏதோ வெண்மையான ஒன்று என்னிடம் வந்து கொண்டிருப்பதை நான் கண்டேன், உடைகள் வைக்கப்பட்டிருந்த அந்த இருக்கையை நான் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்ததாக எண்ணினேன். ஆனால் அது கர்த்தருடைய தூதனாக இருந்தது, அந்த அந்த மேகம், நீங்கள் அறிவீர்கள். அது நான் இருந்த இடத்தின் மேல் வந்தது. 27. (சகோதரன். பிரான்ஹாம் தரிசனத்தை விளக்குகிறார்-தமிழாக்கியோன்) நான்-நான் ஒரு சிறிய அறையில் நின்று கொண்டிருந்தேன், ஒரு “வேட்டைத் துப்பாக்கி" (shotgun) வீடு என்று நாம் அழைக்கும் சிறிய நேரான வீடு, அதில் இரண்டு அறைகள். அந்த அறையின் பக்க சுவர்கள் சிவப்பு நிற வண்ணத்தில் மேற்பூச்சு (waynescoating) பூசப்பட்டிருந்தது, நீங்கள் பாருங்கள். அங்கே என்னுடைய வலது பக்கத்தில் இரும்பினால் பூசப்பட்ட ஒரு சிறிய கட்டில் இருந்தது. கறுத்த தலைமுடியை உடைய ஒரு ஸ்திரீ அதற்கு முன்னாக நின்று கொண்டு இருந்தாள்... அந்த அறை சமையலறைக்குள் செல்லும்படியாக இருந்தது. அவள் அந்த சமையலறையின் கதவுக்கு முன்னாக நின்று, அழுது கொண்டிருந்தாள். அங்கே ஒரு தகப்பன் என்னருகில் நின்று, ஏதோவொன்றை தன்னுடைய சிறிய மார்பின் மீது கொண்டிருந்த, ஒரு பையனை என்னிடம் கொண்டு வந்தார். அந்த பையனுடைய இடது பாதமானது காயப்பட்டிருந்தது, அது அதனுடைய சரீரத்தின் மேல் செயலற்று கிடந்தது, அதனுடைய வலது பாதமும் அவ்வாறே இருந்தது. இரண்டு பாதமும் மிகவும் காயப்பட்டு அதன் சரீரத்தின் மீது செயலற்று கிடந்தது. அவனுடைய சிறிய சரீரமானது வளைந்து, சரியாக அவனுடைய கழுத்து வரை காயப்பட்டிருந்தது. நானோ, “இதனுடைய அர்த்தம் என்னவாக இருக்கும்-?" என்று வியப்படைந்தேன். நான் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தேன், என்னுடைய இடது புறத்தில் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டு கண்ணீர் தோய்ந்திருந்த அல்லது அவளுடைய கண்ணாடியின் மீதிருந்த ஏதோ ஓன்றைத் துடைப்பதற்காக அவளுடைய கண்ணாடியைக் கழற்றினாள். என்னுடைய வலது பக்கத்தில், அந்த இருக்கைக்கு பொருத்தமான ஒரு சிவப்பான இரண்டு அடுக்கினாலான இருக்கை விரிப்பின் (red duofold) மீது சுருள் சுருளான தலைமுடியுடன் கூடிய பொன்னிற தலைமுடியைக் கொண்ட ஒரு வாலிப பையன் ஜன்னலுக்கு வெளியே நோக்கிப் பார்த்தவாறே உட்கார்த்து இருந்தான். 28. என்னுடைய வலப்பக்கத்தில் அங்கே உள்ளே நின்று கொண்டிருந்ததை நான் நோக்கிப் பார்த்தேன், நின்று கொண்டிருந்தது கர்த்தருடைய தூதனாய் இருந்தது. அவர் என்னிடம், “இந்த சிறுபையன் பிழைப்பானா-?” என்று கேட்டார். நானோ, “ஐயா, அது எனக்குத் தெரியாது,” என்றேன். அவர், "உன் கரங்களை அதற்கு குறுக்காக வை. அது பிழைக்கும்,” என்றார் 29. நான்- நான் அப்படியே செய்தேன். அந்த குழந்தை தன்னுடைய தகப்பனுடைய தோளை விட்டு கிழே குதித்தது. அந்த சிறு வலது கால் நேரானது, அந்த வலது பக்கமும் வலது தோளும் நேரானது. அந்தப் பையன் மற்றொரு அடியை எடுத்து வைத்தான், அப்போது மற்ற பக்கமும் நேரானது. மற்றொரு அடியை எடுத்த வைத்தான், மற்ற பக்கமும் சரீரமும், சரீரத்தின் நடுப்பக்கமும் நேரானது. மேலும் அவன் தன்னுடைய சிறு கரங்களை என் மேல் வைத்து, "சகோ. பிரான்ஹாம், நான் பூரணமாக சுகமடைந்து விட்டேன்,” என்றான். அந்த சிறு பையன் நீல நிறமுடைய சொரசொரப்பான பஞ்சு துணி மேலாடையை அணிந்திருந்தான். உடை அழுக்காகாமல் இருக்க உதவும் கழுத்தைச் சுற்றிலும் அணியும் சிறு துணி. அவன் பழுப்பு நிற தலைமுடியைக் கொண்டவனாயும், சின்னஞ்சிறிய வாயைக் கொண்டவனாயும் இருந்தான். 30. அதற்குப் பிறகு, கர்த்தருடைய தூதன் என்னிடம் பேசி அவர் என்னை, வேறு ஏதோவொரு இடத்தில் கொண்டு போய் விட்டார். நான் அப்பால் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர் என்னை ஒரு பழைய கல்லறைத் தோட்டத்தின் (graveyard) பக்கமாய் உட்காரச் செய்தார். ஒரு சபைக்கு அருகிலுள்ள ஒரு கல்லறையில் இருந்த கல்லின் மீதிருந்த எண்களை என்னிடம் காட்டினார். அவர், "இந்த எண்கள் உன்னுடைய சுட்டிக் காட்டப்படும் இடமாக இருக்கும்,” என்றார். 31. அவர் வேறொரு இடத்திற்கு என்னைக் கொண்டு போனார். அது காண்பதற்கு ஒரு சிறு பட்டணமாக இருந்தது, அதில் பலவித பொருட்கள் விற்கும் சுமார் இரண்டு கடைகள் இருந்தன. அதில் முன்பக்கம் மஞ்சள் நிறத்திலும், அதன் சுவர்களின் மீது மஞ்சள் நிற மரப்பலகையும் காணப்பட்டது. நான் அங்கே நடந்து சென்றேன் அல்லது அங்கே நின்றேன். அங்கே நீளவாக்கில் "புரி”கள் கொண்ட ஒரு வகைப் பருத்தித் துணியினாலான மேலாடை அல்லது ஒரு நீலநிற ஜீன் என்ற பருத்தித் துணியினால் செய்யப்பட்ட மேலாடை மற்றும் நீல நிற மேலாடை அணிந்து, ஒரு வகை பருத்தித் துணியினாலான மஞ்சள் நிற குல்லாய் (cap) அணிந்து கொண்டிருந்த ஒரு வயதான மனிதன் அங்கிருந்து வெளியே வந்தான். அவன் பெரிய வெண்மையான மீசையைக் கொண்டு இருந்தான். அவர், “அவன் உனக்கு வழியைக் காட்டுவான்,” என்றார். 32. நான் அடுத்த தடவை வந்து, சிறிது பருத்த ஒரு வாலிப ஸ்திரீயைப் பின் தொடர்ந்து, ஒரு அறைக்குள் நடந்து சென்றதை நான் கண்டேன். நான் அந்த அறையின் வாசலுக்குள் நுழைந்த போது, அந்த அறையின் சுவர்களின் மீதிருந்த தாளில் (paper) இருந்த படங்கள் சிவப்பு நிறத்தில் இருந்தன. அந்தக் கதவின் மேல், "நம்முடைய வீட்டை தேவன் ஆசீர்வதிப்பாராக,” என்று ஒரு அடையாளம் காணப்பட்டது. என்னுடைய வலப்பக்கத்தில் பெரிய பழைய பித்தளை பதிக்கப்பட்ட ஒரு கட்டில் கிடந்தது. மேலும் கனத்த சூட்டடுப்பு ஒன்று இடது பக்கத்தில் இருந்தது. ஏறக்குறைய 15 வயதான ஒரு வாலிப பெண் அங்கே ஒரு மூலையில் படுத்திருந்தாள். அவள் போலியோ அல்லது ஏதோ ஓன்றைக் கொண்டு இருந்தாள், அவளுடைய வலது கால் செயலிழந்து காணப்பட்டது. அவளுடைய பாதமானது ஒரு பக்கமாக திருப்பப்பட்டு அவளுக்கு கீழாக இழுக்கப்பட்டிருந்தது. அவள்- அவள் ஒரு பையனைப் போலக் காட்சியளித்தாள். அவள் தன்னுடைய தலைமயிரில் மட்டுமே ஒரு சிறு பெண்ணைப் போலக் காட்சி அளித்தாள், ஒரு சிறு பெண்ணுக்கு இருப்பதைப் போன்ற ஒரு இருதய வடிவுடைய உதடுகளை அவள் கொண்டிருந்தாள். அவர் என்னிடம், "அந்த சிறு பெண்ணால் நடக்க முடியுமா-?” என்று கேட்டார். நான், "ஐயா, எனக்கு தெரியாது,” என்றேன். 33. அவர், "சென்று அவளுடைய வயிற்றின் குறுக்கே உன்னுடைய கரங்களை வை,” என்றார். அப்போது அது ஒரு யைபனாய் இருந்ததாக நான் நினைத்தேன், போதுமான அளவு நிச்சயமுடையவனாய் இருந்தேன், ஏனெனில் என்னுடைய கரங்களை அவளுடைய வயிற்றின் குறுக்கே வைக்குபடி அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் சொன்னபடியே நான் செய்தேன். 34. யாரோ ஒருவர், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்," என்று கூறுவதை நான் கேட்டேன். நான் மேலே நோக்கிப் பார்த்தேன் , நான் அப்படிச் செய்த போது இந்தச் சிறு பெண் எழும்பினாள். அவள் எழுந்த போது, அவளுடைய இரவு உடுப்பிலிருந்து (pajamas) கால் காணப்பட்டது, அவளுடைய முழுங்காலானது, முடிச்சுகளின்றி, ஒரு சிறு பெண்ணின் முழங்காலைப் போன்று வட்டமாக காணப்பட்டது, நீங்கள் அறிவீர்கள், அந்த பையனின் முழங்காலைப் போன்று அல்ல. அது ஒரு சிறு பெண்ணென்று நான் அறிந்து கொண்டேன். அவள் தன்னுடைய இரவு உடையில் இருந்தாள். அவள் தன்னுடைய தலைமுடியை வாரிக் கொண்டே என்னிடம் நடந்து வந்தாள். அவள் பொன்னிற தலை முடியைக் கொண்டிருந்து, அதை வாரிக் கொண்டிருந்தாள். 35. இன்று அந்த சிறு பெண் சாலேமில் (salem) வசிக்கிறாள், விவாகமாகி மூன்று அல்லது நான்கு பிள்ளைகளைக் கொண்டிருக்கிறாள். மேலும் அவளுடைய தாயும் தகப்பனும் இன்னும் அங்கே தான் இருக்கின்றனர். 36. எனவே நான்-நான்-நான் வந்தேன். யாரோ ஒருவர், "சகோ.பிரான்ஹாம்..." அல்லது "சகோ.பில்-! ஓ, சகோ.பில்-!" என்று கூப்பிடுவதை என்னால் கேட்க முடிந்தது. மேலும் என்னுடைய தாய் என்னை அழைத்துக் கொண்டிருந்தாள். மேலும் நான் நினைத்தேன். நான் கூப்பிடும் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அந்த தரிசனத்தை விட்டு வெளியே வந்தேன், நீங்கள் அறிவீர்கள், ஒரு வகையாக தள்ளாடினவனாக காணப்பட்டேன். நான், "அம்மா, உங்களுக்கு என்ன வேண்டும்-? என்று கேட்டேன். அடுத்த அறையில் தான் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவள், "யாரோ உன்னுடைய கதவைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினாள். 37. "சகோ.பில்-!” என்ற சத்தத்தை நான் கேட்டேன். நான் கதவைத் திறந்தேன். அங்கே ஒரு மனிதர் படிக்கட்டில் ஏறி நின்று கொண்டு இருந்தார். அவருடைய பெயர் ஜான் எமில். அவர் இப்பொழுது, ஃபிளோரிடாவிலுள்ள மியாமியில் வசிக்கிறார். அவர், "சகோ.பில், உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லையா-?” என்றார். நான், "இல்லை, எனக்கு ஞாபகம் உள்ளதென்று நான் நம்பவில்லை,” என்றேன். 38. “நீங்கள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஞானஸ்நானம் பண்ணி வைத்தீர்கள். ஆனால்,” என்றார், “தவறான ஒரு வழியை நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார். அவர், “நான் இங்கே சில நாட்களுக்கு முன்னால் ஒரு மனிதனைக் கொன்றேன். ஒரு சண்டையில் என்னுடைய கை முட்டியால் அவனை அடித்து, அவனுடைய கழுத்தை முறித்தேன்,” என்றார். “என்னுடைய சிறு பையன்களில் மூத்தவனை நான் இழந்து விட்டேன்,” என்றார். "இளையவன் இப்பொழுது வீட்டில் படுத்துக் கொண்டு மரித்துக் கொண்டிருக்கிறான்," என்றார்; "பட்டணத்தின் மருத்துவர் இப்பொழுது தான் வந்து சென்றார், பிள்ளை இரண்டு மடங்கு பக்கவாதத்தால் (pneumonia) பாதிக்கப்பட்டுள்ளான்,” என்று கூறினார், "அதனால் குறைவாகவே மூச்சுவிட முடியும்,” என்றார். “நான்- நான்- நான் -நான் அப்படியே... நீர் என்னுடைய நினைவுக்கு வந்தீர். நீர் வந்து அதற்காக ஜெபிப்பீரானால் என்று வியப்படைந்தேன்," என்று கூறினார். "இப்பொழுது, நீங்கள் அறிந்துள்ளபடி, நான் கிரஹாம் ஸ்நெல்லிங்குக்கு ஒரு ஒன்றுவிட்ட உறவினனாக இருக்கிறேன்,” என்றார். கிரகாம் ஸ்நெல்லிங், (இப்பொழுது சங்கை.கிரகாம்-ஸ்நெல்லிங்) அந்த நேரத்தில் ஒரு ஊழியக்காரராக ஆகி இருக்கவில்லை; ஒரு அருமையான கிறிஸ்தவ பையன். அவர், "அவர் என்னுடைய ஒன்றுவிட்ட உறவினனாக இருக்கிறார். நான் அவரை காணும்படி சென்று கொண்டிருந்தேன்,” என்றார். அவர் பட்டணத்தில் என்னிடம் இருந்து ஏறக்குறைய அரை மைல் தூரத்தில் வசித்துக் கொண்டிருந்தார். “நான் அவரைக் கூட்டிக் கொண்டு வரும்படி போகப்போகிறேன். நீங்கள் வரக்கூடுமா-?” என்று கேட்டார். நான், “சரி, திரு.எமில் அவர்களே, நான் உடனடியாக என்னுடைய ஆடைகளை அணிந்து கொள்கிறேன்,” என்றேன். எனவே அவர், “நான் என்னுடைய காரில் உங்களை கொண்டுச் செல்வேன்,” என்றார். நான், “சரி,” என்றேன். 39. “நான் சீக்கிரமாக கிரகாமை அழைத்து வருகிறேன். நீங்கள் அனைவரும் அந்தப் பிள்ளைக்காக ஜெபிக்கும்படி நான் விரும்புகிறேன்,” என்றார். நான், “சரி,” என்றேன். 40. எனவே அப்போது நான் ஆயத்தமாகும்படி சென்றேன். என்னுடைய தாய், "என்ன காரியம்-?" என்ற கேட்டாள். நான், "ஒரு சிறு பிள்ளை சுகமாகப் போகிறான்,” என்றேன். எனவே அவள், "சுகமடைய போகிறானா-?" என்றாள். நான், "ஆம், அம்மா,” என்றேன். எனவே நான், “நான் திரும்பி வரும் போது அதைக் குறித்த மீதமுள்ளவற்றை உங்களிடம் சொல்லுகிறேன்,” என்று கூறினேன். 41. எனவே சிறிது நேரத்தில், அவர் கதவைத் தட்டினார், சகோ.கிரஹாமும் அவருடன் இருந்தார். இப்போழுது அந்த நேரத்தில் பழைய ஹவார்டு கப்பல் கட்டும் துறை என்ற பெயரிலிருந்து, இப்பொழுது படகு கட்டும் துறை (boatyard) என்று நாம் அறிந்துள்ள இடத்திற்கு நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். நான், "திரு.எமில் அவர்களே, இப்பொழுது நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்-?" என்று கேட்டேன். அவர், "ஊடிகாவுக்கு மேலே,” என்றார். 42. நான், “நாம் 'வேட்டைத்துப்பாக்கி (shotgun)' வீடு என்று அழைக்கும் இரண்டு சிறிய அறைகள் கொண்ட வீட்டில் நீர் வசிக்கிறீர்,” என்றேன். "ஆம், ஐயா,” “அது ஒரு மலையின் மேலுள்ளது,” அவர், "ஆம், ஐயா,” என்றார். 43. நான், "இங்கேயுள்ள உங்களுடைய வீட்டின் உட்புறச்சுவரின் அடியிலுள்ள மரப்பலகை (base board) ஆனது, அடுத்தடுத்த மரப்பலகையின் இணைப்பால் (tongue-and-groove) கட்டப்பட்டது, அது சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது,” என்றேன். அவர், "அது சரியே,” என்றார். 44. நான், "அந்த சிறு பிள்ளை இரும்பு பதிக்கப்பட்ட கட்டிலில் படுத்துள்ளது. அவன் அந்த வீட்டில் நீல நிற பருத்தித் துணியினாலான மேலாடையை அணிந்து கொண்டு இருக்கிறான்,” என்றேன். "அவன் அவைகளை தன் மீது அணிந்து கொண்டுள்ளான்,” என்றார். 45. நான், "அந்த பிள்ளை மிகச் சிறிய பையனாக இருக்கிறான், ஏறக்குறைய மூன்று வயது. மேலும் அவன் ஒரு சிறிய வாயையும், சிறிய மெல்லிய உதடுகளையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் மெல்லிய பழுப்பு நிற தலை மயிரையும் பெற்றுள்ளான்,” என்றேன். அவர், "அது உண்மை,” என்றார். 46. நான், "திருமதி. எமில் கறுப்பு தலைமுடியுள்ள ஒரு ஸ்திரீ. மேலும் இந்த அறையில், நீங்கள் ஒரு சிவப்பான இரண்டு அடுக்கினாலான இருக்கை விரிப்பையும், ஒரு சிவப்பான இருக்கையையும் கொண்டிருக்கிறீர்கள்,” என்றேன். அவர், "சகோ. பிரான்ஹாமே, நீங்கள் எப்பொழுதாவது அங்கே இருந்ததுண்டா-?” என்று கேட்டார். நான், "சிறிது நேரத்திற்கு முன்னால் அங்கே இருந்தேன்,” என்றேன். அவர், "சிறிது நேரத்துக்கு முன்னரா-?” என்றார். நான், “ஆம்,” என்றேன். “ஏன்," "நான் உம்மை காணவேயில்லையே,” என்றார் அவர். 47. நான், “இல்லை, அது ஆவிக்குரியதாயிருந்தது,” என்றேன், நான், “திரு.எமில் அவர்களே, நான் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாக இருந்தால், எனக்கு சம்பவிக்கும் காரியங்களை நான் சொல்ல நீங்கள் கேட்டது உண்டு அல்லவா-? அது... அது சம்பவிக்கும் முன்பே அந்த காரியங்களை நான் கண்டேனே,” என்றேன். 48. அவர், "ஆம். சகோ.பிரான்ஹாம், அதைப் போன்ற ஏதோவொன்று உங்களுக்கு சம்பவித்ததா-?” என்றார். 49. நான், “ஆம். திரு.எமில் அவர்களே, அது என்னிடம் எப்பொழுதாவது எதையாவது கூறும் போது, என்னிடம் ஒரு பொய் கூட அது கூறினதேயில்லை. நான் அங்கே போய் சேர்ந்தவுடன் உங்கள் பிள்ளை சுகமடையப் போகிறது,” என்றேன். 50. அவர், காரை நிறுத்தி, அதன் சக்கரங்கள் மேல் விழுந்து, “தேவனே, என் மேல் கிருபையாயிரும். என்னை திருப்பிக் கொண்டு வாரும், ஒ கர்த்தாவே," என்று கூறினார். பாருங்கள்-? "நீர் என் பிள்ளைக்கு மீண்டும் ஜீவனைக் கொடுப்பீரானால் மீதமுள்ள என் நாட்களில் உமக்காக ஜீவிப்பேன் என்று நான் உமக்கு வாக்கு அளிக்கிறேன்”. மேலும் அவர் தம்முடைய இருதயத்தை அங்கேயே கிறிஸ்துவுக்குக் கொடுத்தார். நாங்கள் அந்த வீட்டினுள் சென்றோம், எல்லாரும் அவரைக் குறித்து உணர்ச்சி வசப்பட்டனர், ஒரு ஆத்துமா திரும்ப கிறிஸ்துவிடம் கொண்டு வரப்பட்டது. 51. நாங்கள் அந்த வீட்டினுள் சென்ற போது, ஒவ்வொன்றும் அது இருக்க வேண்டிய வழியிலேயே அப்படியே மிகச் சரியாக அங்கே இருந்தது, அந்த வயதான பெண்மணி மாத்திரம் அங்கு இருக்கவில்லை. உணர்ச்சியால் தூண்டப்படுதல், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, “பிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள்,” என்றேன். அந்த பிள்ளை மீண்டும் ஜீவிப்பதே கடினம். பாருங்கள்-? "எதிர்பாராத ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளது,'' பிள்ளையை விட்டு ஜீவன் ஏறக்குறைய போய் விட்டிருந்தது. அது அப்படியே இங்கே அதனுடைய சிறு தொண்டையை காயப்படுத்தி இருந்தது. நான், "பிள்ளையை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்,” என்றேன். அந்தத் தரிசனம் நிறைவேறும்படி காத்து இருக்கவில்லை. 52. சகோ.வேயில், இந்த சிறு மெத்தை இங்கே கிடக்க வேண்டியதாயுள்ளது என்று நினைத்துப் பார்ப்பேனானால், அந்த மெத்தை அங்கே கிடப்பது வரை நான் ஒரு வார்த்தையும் பேச முடியாது. பாருங்கள்-? அது என்னிடம் காட்டும் அவ்வழியிலேயே அது இருக்க வேண்டியதாயுள்ளது. 53. எனவே நான், "பிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள்,” என்றேன். அந்த தகப்பன் பிள்ளையை என்னிடம் கொண்டு வந்தார், நான் அதற்காக ஜெபித்தேன். அது மோசமாக ஆனது. எனவே நான், "இப்பொழுது ஏதோவொன்று...” என்று எண்ணினேன். அது உண்மையாகவே மூச்சு விடுவதை நிறுத்தி இருந்தது, அது மூச்சு விடுவதற்கு போராடவும் உதறவும் மற்றும் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டி இருந்தது. “இப்பொழுது, அங்கே ஏதோவொன்று தவறாயுள்ளது,'' என்று நான் எண்ணினேன். 54. நான், "அந்த வயதான பெண்மணி எங்கே-?” என்று எண்ண நேர்ந்தது. இருப்பினும் அவள் அங்கிருக்கவில்லை. 55. எனவே அவர்கள் அப்பிள்ளையை எடுத்துக் கொண்டு வந்து அதை கிடத்தினர். அதனுடைய மூக்குக்குக் கீழே அந்த பொருளை வைத்து மற்றும் ஒவ்வொன்றையும் செய்து அழுது கொண்டு இருந்தனர். தாய் திடீரென்று கூக்குரலிட்டு அழுதாள் மற்றும் ஒவ்வொன்றும். ஆனால் பிள்ளையோ அப்படியே அப்படியே குறைந்த அளவே மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. 56. நான், "நல்லது, என்னுடைய முட்டாள்தனத்தால், தேவனுடைய தரிசனத்தை நான் தவறாக பயன்படுத்தி விட்டேன், ஏனெனில் நான் அதன் மீது காத்து இருக்கவில்லை, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்,” என்று நினைத்தேன். 57. சகோ.வேயில், நான் ஏன் காத்திருக்கிறேன் என்று இதன் மூலம் உங்களால் காண முடியும். யார் என்னிடம் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நான் உங்களை என் சகோதரனாக நேசிக்கிறேன். சகோதரனே, நான் கர்த்தருடைய சித்தத்தை பெற்றிருப்பதாக நான் உணரும் போது, நான் செய்யும் படி நீங்கள் ஏதோவொன்றைக் கூறுகிறீர்கள், அப்படிச் செய்ய முயற்சிக்க வேண்டாம். பாருங்கள்-? மற்ற வழியைக் காண்பதற்கு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அது காரியமில்லை, நான் அவருக்காக காத்திருப்பேன். பாருங்கள்-? நான்- நான் அனேக, அனேக, அனேக வருடங்களுக்கு முன்னால் சரியாக இங்கே ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும்படி அவர் என்ன கூறுகிறாரோ, அவர் சொன்னபடி செய்யப்படுவதற்கு ஆயத்தமாகும் வரை அதைச் செய்யமாட்டேன். 58. பிள்ளை மூச்சுவிடுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் செய்ததை அவர்களிடம் கூற முடியவில்லை, ஆனால் நான் அப்படியே காத்து இருக்க வேண்டியதாய் இருந்தது. நான், “ஒரு வேளை கிருபையானது இதை மாற்றி விடும், அவர் என்னை மன்னிப்பார்,” என்று எண்ணினேன். நல்லது, நான் சென்று உட்கார்ந்தேன். 59. அவர்கள் பகல் வெளிச்சம் வரை அந்த பிள்ளையின் ஜீவனுக்காக போராடினர். அந்த நாள் முடியத் தொடங்கின போது அந்தப் பிள்ளை எந்த நிமிடமும் போய் விடும் என்று அவர்கள் எண்ணினர். நல்லது, நான் அங்கேயே உட்கார்ந்தேன். அவர்கள் என்னிடம், "சகோ.பிரான்ஹாம், நாம் என்ன தான் செய்ய வேண்டும்-?” அல்லது "சகோ.பில், நான் செய்ய வேண்டியது என்ன-?” என்று என்னிடம் கேட்டு கொண்டே இருந்தனர். 60. நான், "எனக்கு தெரியாது,” என்றேன். பாருங்கள்-? நான் அங்கேயே உட்கார்ந்து என்னுடைய தலையை தாழ்த்தியபடியே, "கர்த்தாவே, தயவு செய்து என்னை மன்னியும்,” என்று கூறிக் கொண்டிருந்தேன். 61. நல்லது, பிறகு பகல் வெளிச்சம் வருகிறது. சகோ.கிரகாம்-ஸ்நெல்லிங் வேலைக்குப் போக வேண்டியதாய் இருந்தது. எனவே திரு.எமில் அவரை கொண்டு போய் விடவேண்டியதாயிருந்தது, நானும் அந்த வீட்டை விட்டுப்போக வேண்டியதாய் இருந்ததை நான் அறிந்தேன். 62. இருப்பினும், சகோ.கிரஹாம் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டுமென்று மனதில் எண்ணிக் கொண்டார், ஏனெனில் நீங்கள் அறிந்துள்ளபடி, அவர் பொன்னிற சுருள்முடி கொண்டவர். அவர் இந்த இரண்டு அடுக்கினாலான இருக்கை விரிப்பின் மீது உட்கார்ந்திருக்க வேண்டுமென்று மனதில் எண்ணினார். எனவே சகோதரன் - கிரஹாம் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று எண்ணின இடத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன், ஆனால் அந்த வயதான பெண்மணி அங்கே இருக்கவில்லை. அந்த இடத்தில் எந்த வயதான பெண்மணியும் கிடையாது. எனவே நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மேலும் எனவே திரு.எமில் அவர்கள் தம்முடைய மேற் சட்டையை (coat) அணிந்தார். 63. பிறகு, சகோ.கிரஹாம் திரும்பிச் செல்வாரானால், அவர் எப்போது திரும்பி வருவார் என்பதை கூறுவது கடினம் என்பதை நான் அறிந்தேன். பாருங்கள்-? அந்தப் பெண்மணி வந்தாலும் கூட, அப்போது சகோ.கிரஹாம் அங்கிருக்க மாட்டார் என்பதும் எனக்குத் தெரியும். எனவே நான் எந்த மாதிரியான ஒரு நிலையில் உள்ளே இருந்தேன் என்பதை நீங்கள் பாருங்கள். 64. எனவே திரு.எமில், “சகோ.பிரான்ஹாம், நீங்கள் போக விரும்புகிறீர்களா-?” என்று கேட்டார். அல்லது, “சகோ.பில், நீங்கள் வீட்டிற்குப் போக விரும்புகிறீர் களா-? நான் உங்களை வீட்டிற்கு கூட்டிச் செல்ல விரும்புகிறீர்களா-?” என்று கேட்டார். 65. நான், “வேண்டாம், ஐயா. நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், நான் அப்படியே காத்திருக்கப் போகிறேன்” என்றேன். நான் அங்கே அந்த வீட்டில் தங்குவதை வெறுத்தேன், அப்படியே அந்தப் பிள்ளையும், அந்த தாயும், நானும், ஏனெனில் அவர்கள் வாலிப ஜனங்களாய் இருந்தனர். அவர்கள், அவர் ஏறக்குறைய 25 வயதுள்ளவராய் இருந்தார் என்று நான் ஊகிக்கிறேன். நானும் ஏறக்குறைய அதே வயதுள்ளவனாய் இருந்தேன். நான், “வேண்டாம். நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், நான் அப்படியே-நான் அப்படியே காத்திருக்கப் போகிறேன்,” என்றேன். அவர், “அது சரி, சகோதரனே, சகோ.பில்,” என்றார். 66. எனவே, அந்தத் தாய் பெரிதும் மனக்கிளர்ச்சியுற்று தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் தரையில் நடந்து கொண்டே அழுது கொண்டும் மற்றும் ஒவ்வொன்றையும் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள், நீங்கள் அறிவீர்கள். அந்த பிள்ளையானது அப்படியே மோசமடைந்தது. பாருங்கள்-? அது இதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இதைப் போன்ற போய்க் கொண்டு இருந்தது, (சகோதரன் பிரான்ஹாம் மூச்சுத்திணறும் போது ஏற்படும் சத்தத்தை 2 முறை உண்டாக்கு கிறார் - ஆசிரியர்) அவ்வளவு தான், அதன் மூச்சு அதில் இருந்தது. கிடையாது... அவர்கள் பெனிசிலினையும் காரியங்களையும் அந்த நாட்களில் கொண்டு இருக்கவில்லை, நீங்கள் பாருங்கள். எனவே அவர்கள் அப்படியே - அவர்கள் அப்படியே அவைகளின் மீது மருந்தினாலான துணியை வைத்தனர், மற்றும் அதைப் போன்ற காரியங்கள். ஆனால் அந்த சிறு பிள்ளை அதை அனேக நாட்களாகக் கொண்டிருந்தான். அது போய் விட்டது பாருங்கள், அல்லது போய்க் கொண்டிருக்கிறது. 67. மேலும், பிறகு, நான்- நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன் நான், "என்னே, கிரஹாம் போவாரானால்," என்று எண்ணினேன். கிரஹாம் தன்னுடைய மேற் சட்டையை அணிந்து கொண்டு, கதவுக்கு வெளியே அவர் போகத் தொடங்கினார். 68. அவர் தன்னுடைய மனைவியிடம், "இப்பொழுது, நாங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறோம்,” என்று கூறினார். 69. நான், "ஓ தேவனே, நான் இங்கே மீண்டும் முழு நாளும், ஒருவேளை முழு இரவும் தங்கியிருந்து, பார்த்து அந்த தரிசனத்திற்காக காத்து கொண்டு இருக்க வேண்டியதாய் இருக்கும். நான் என்ன செய்ய வேண்டும்-?” என்று எண்ணினேன். 70. நான் ஜன்னலுக்கு வெளியே நோக்கிப் பார்த்தேன். நான் வீட்டைச் சுற்றிலும் பார்த்த போது, பிள்ளையின் பாட்டி வந்தாள். அது பாட்டி தான் என்று பின்னரே நான் அறிந்து கொண்டேன். மேலும் அவள் கண்ணாடி அணிந்திருந்தாள். நான், "கர்த்தாவே, இது தான் அது, கிரஹாம் அப்படியே வாசலுக்கு வெளியே போகாது இருந்தால்," என்று எண்ணினேன். எனவே, அவள் எப்பொழுதும் முன்பக்க வாசல் வழியாகத் தான் வருவாள். ஆனால், ஏதோ ஒரு வகையில், இருப்பினும் அவர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை, ஆனால் அவளோ பின்பக்க வாசலுக்குச் சென்று, சமையலறைக்குள் வந்தாள். அவள் அந்தச் சிறு பழைய வீட்டில் சமையலறையில் நடந்து சென்றாள். அவள் அந்த வாசலை வந்து அடைந்தாள், அவளுடைய மகள் அங்கு ஓடி சென்று அவளை முத்தமிட்டாள், ஏனெனில் அது அந்த மகளின் தாயார், நீங்கள் அறிவீர்கள், அவளை முத்தமிட்டாள். மேலும் சகோ.கிரஹாம்... பிறகு அவள், "பிள்ளை சுகமாக உள்ளதா-?” என்று கேட்டாள். 71. அவள், "அம்மா, அது மரித்துக் கொண்டு இருக்கிறது,” என்றாள். அவள் இதைப் போன்று அழுது கூச்சலிடத் தொடங்கினாள், அவளுடைய தாயும் அழுதாள். 72. அப்போது நான், "கிரஹாம் வெளியே போகாதிருந்தால் இது அப்படியே கிரியை செய்யும்,” என்று எண்ணினேன். 73. நான் எழுந்தேன். நான் எதையும் கூற முடியவில்லை, நீங்கள் பாருங்கள், அப்படியே காத்திருந்தேன். மேலும் சகோதரன் கிரஹாம் சுற்றிலும் நடந்தார். நான் எழுந்தேன், எனவே அவர் உட்கார முடிந்தது. மேலும் அவர்... அது அவருடைய உறவினர்களில் சிலராக இருந்தது, நீங்கள் பாருங்கள், எனவே அவர் அப்படியே மிகவுமாய் அழத் தொடங்கினார், மேலும் அவர் உட்கார்ந்திருக்க வேண்டுமென்று கருதியிருந்த இடத்திலிருந்த அந்த இரண்டு அடுக்கினாலான இருக்கை விரிப்பின் மீது உட்கார்ந்தார். 74. நான், "இப்பொழுது, அந்த வயதான ஸ்திரீ அப்படியே சுற்றி வந்து இந்த சிவப்பான இருக்கையில் இருப்பாளானால்-!” என்று எண்ணினேன். நான் திரும்ப வாசலுக்குச் சென்றேன். அங்கே திரு.எமில் அவர்கள் தம்முடைய மேற் சட்டையை (coat) அணிந்தவராய், வெளியே போவதற்கு ஆயத்தமாக நின்று கொண்டு இருந்தார். உண்மையிலேயே குளிரான சீதோஷ்ண நிலை, திடீரென்று ஏற்பட்ட சமாளிக்க வேண்டிய குளிர். மேலும் நான் நினைத்தேன்... அந்த வயதான ஸ்திரீ இந்த இருக்கையில் அமர்ந்தால்... 75. கிரஹாம் உட்கார்ந்து, தன்னுடைய தலையைத் தாழ்த்தினார். பிள்ளையின் தாய் தன்னுடைய கரத்தை வாசலின் மேல் வைத்தவாறே அழுது கூச்சலிடத் தொடங்கினாள். அப்படியே மிகச் சரியாக அந்த தரிசனத்தின்படி-! மேலும் அந்த வயதான ஸ்திரீயும் உட்கார்ந்தாள். அவளுடைய கண்ணீர் அவளுடைய கண்ணாடியில் மூடுபனியின் காரணமாக ஒன்றோடொன்று புகைப்படலம் போன்று படிந்தது, ஏனெனில் அது குளிர் சீதோஷ்ண நிலையில் வந்த கண்ணீர். அவள் தன்னுடைய சிறு பெட்டியண்டை (briefcase) சென்று, அதிலிருந்து ஒரு சிறிய கைக்குட்டையை வெளியே எடுத்து, அதைக் கொண்டு இந்தக் கண்ணாடியைத் துடைக்கத் துவங்கினாள். (சகோ.பிரான்ஹாம் தன்னுடைய விரலை ஒரு முறை சொடுக்குகிறார் - ஆசிரியர்) சகோதரனே, இது தான் அது. 76. நான் திரு.எமிலிடம் கூறினேன். நான், "திரு.எமில் அவர்களே, நான் கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரனென்று இன்னமும் என் மேல் நம்பிக்கை கொண்டு உள்ளீர்களா-?” என்றேன். அவர், "நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன், சகோ.பிரான்ஹாம்,” என்றார். 77. நான், “நான் இப்பொழுது உங்களிடம் கூற முடியும். சிறிது நேரத்துக்கு முன்னால், அந்த தரிசனம் நிகழ்வதற்கு முன்பாகவே அதைக் குறித்து நான் கூறினேன், இது ஏன் சம்பவிக்கவில்லையென்று. நீங்கள் இன்னும் என்னில் நம்பிக்கை கொண்டு இருப்பீர்களானால், உங்கள் பிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள்,” என்றேன். ஓ, என்னே-! அது சரியென்று நான் காண்கிறேன், அப்போது, நீங்கள் பாருங்கள். “போய், உங்கள் பிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள்.” 78. அவர், "சகோ.பில், நான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கூறும் எதையும் நான் செய்வேன். அதைச் செய்வதற்கு நான் பயப்பட மாட்டேன்,” என்று கூறினார். ஏனெனில் அவர்கள் அந்த பிள்ளையை எடுத்துக் கொண்டு வருவார்களானால், அது அப்படியே போய் விடும், மூச்சுவிடுதலும் சேர்ந்து போய் விடும். அந்தச் சிறுபிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றேன். அந்தப் பிள்ளை இடம் சென்று, அதை அவருடைய தோளில் எடுத்து கொண்டு, என்னிடம் கொண்டு வந்து அங்கே நின்றார். 79. நான் என் கரத்தை அந்த பிள்ளையின் மீது வைத்து, "கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனின் முட்டாள்தனத்தை மன்னியும், பாருங்கள்-? நான் உம்முடைய தரிசனத்தைக் குறித்து அது சம்பவிக்கும் முன்பே துணிந்து சொன்னேன். ஆனால் இப்பொழுது நீரே வானங்களுக்கும் பூமிக்கும் தேவனாயிருக்கிறீரென்று அறியும்படி செய்தருளும்.” என்றேன். 80. நான் (கர்த்தரிடம்) வேறொன்றும் கூறவில்லை, அந்த சிறுபிள்ளை அதனுடைய தகப்பனை சுற்றி இரண்டு கரங்களையும் இட்டு, "அப்பா, நான் இப்பொழுது நலமாக உணருகிறேன்,” என்று கூறிக் கொண்டு சத்தமிட்டு அழத் தொடங்கியது. பாருங்கள்-? 81. நான், "திரு.எமில் அவர்களே, அந்த சிறு ள்ளையை தனியே இருக்க அனுமதியுங்கள். அது அதை விட்டுப் போவதற்கு மூன்று நாட்களாகும், ஏனெனில் அது மூன்று படிகளாக செய்யப்பட்டுள்ளது, விசுவாசப்படுத்திக் கொள்ள,” என்றேன். 82. நான் வீட்டிற்குச் சென்றேன். நான் அதை என்னுடைய சபையில் கூறினேன். நான், "நான் அங்கே திரும்பிச் செல்ல போகிறேன்,” என்றேன். அது திங்கள் கிழமையாக இருந்தது. நான், “நான் புதன்கிழமை இரவு சபைக்கு செல்லும் முன்பதாக நான் அங்கே போகிறேன்,” என்றேன். அவர்கள் ஏழை ஜனங்களாய் இருந்தனர், நாங்கள் அவர்களிடம் எடுத்துச் செல்லும்படி பலசரக்கு சாமான்கள் அடங்கிய ஒரு கூடையை ஆயத்தம் செய்தோம். எனவே நான், "நான் அங்கே போகும் போது, நீங்களெல்லாரும் கூட செல்ல நான் விரும்புகிறேன். நீங்கள் வீட்டைச் சுற்றி வாருங்கள். நான் அவ்விடமிருக்கும் இடத்தில் வரும் போது, அந்தச் சிறுபிள்ளை சாக்லேட் பால் அல்லது ஏதோவொன்றைக் குடித்துக் கொண்டு அதன் காரணமாக இங்கே உண்டான ஒரு சிறு மீசையுடன் தரையில் வருகின்றானா இல்லையா என்று கவனித்துப் பாருங்கள்”. அவன் தன்னுடைய கரங்களை என் மேல் வைத்து, "சகோதரன் பில், நான் பரிபூரணமாக சுகமடைந்து விட்டேன்,” என்னும் இந்த வார்த்தைகளைக் கூறுவதையும் பாருங்கள். “இந்தச் சிறு மூன்று வயது பிள்ளை. அது சம்பவிக்கிறதா இல்லையா என்று கவனித்துப் பாருங்கள்,” என்றேன். 83. இப்பொழுது என்னுடைய மனைவியும் அந்தக் கூட்டத்தில் இருந்தாள், இது நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு நடந்ததாகும். நான் அந்தப் பழைய பொதுச்சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான லாரியை ஓட்டிக் கொண்டு சென்ற போது (அதில் தான் அந்த இரவில் நான் வீட்டிற்குச் சென்றேன்) பாருங்கள், என்னைக் காணும்படி அவர்கள் ஒரு சரக்கு வண்டியில் பாரமேற்றி சென்று அந்த வீட்டைச் சுற்றி நிறுத்தினர். நான் எனக்கு சொந்தமாக எந்தக் காரையும் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பின்னால் கீலினாலும் (tar) காரியங்களாலும் முழுவதும் நிரம்பியிருந்தது, நீங்கள் அறிவீர்கள், அங்கே நான் அந்த நாளில் ஓரிடத்திலிருந்து அவ்விடத்திற்கு கொண்டு சென்ற காரியங்களை முடிவு செய்து கொண்டிருந்தேன். முன்பக்கத்தில் ஓட்டிச் சென்று நிறுத்தினேன். நுழைவாயிலின் மீது சென்று, கதவைத் தட்டினேன். அவர்கள் அந்தப் பழைய தரையில் எந்த தரைவிரிப்புகளையும் கொண்டு இருக்கவில்லை. அந்த தாய் தரையை கடந்து வந்து, "ஏன், இது சகோதரன் பில்,” என்றாள், அதைப் போன்று. அந்த நேரத்தில், ஜனங்கள் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் காணும்படி ஜன்னல்கள் வழியாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். 84. இந்தச் சிறு பையன் மூன்றாவது நாள் அந்த மூலையில் விளையாடிக் கொண்டு இருந்தான். நான் நின்றேன், ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவன் அந்தத் தரைக்குக் குறுக்காக சுற்றி வந்து, தன்னுடைய சிறு கரங்களை என் மேல் வைத்தான். சாக்லேட் பாலை குடித்துக் கொண்டு, அதன் காரணமாக வழிந்து கொண்டிருந்த தன்னுடைய சிறு மீசையைக் கொண்டு இருந்தான். அவனுடைய கரங்களை என் மேல் வைத்து, "சகோ.பில், நான் பரிபூரணமாக சுகம் அடைந்து விட்டேன்,” என்றான். ஆ-! 85. அந்த இரவு சபையில் நான் அதைக் கூறினேன். நான், “ஏதோவொரு இடத்தில் ஏழையான ஒரு ஊனமுற்ற சிறு பெண் தேவையுள்ளவளாக இருக்கிறாள்,” என்றேன். நான், "சபையே, இந்தக் காரியங்கள் எதைக் குறிக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. என்னால் உங்களிடம் கூற முடியாது,” என்றேன். 86. எனவே நான் பொதுச்சேவை நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, நான் ஒரு நாளை நினைவு கூருகிறேன். நான் கட்டிடத்தை விட்டு புறப்பட்டு வெளியே செல்லத் தொடங்கினேன். இங்கே சரியாக இந்தப் பட்டணத்தில் இப்பொழுது வசித்துக் கொண்டு இருக்கும் திரு. ஹெர்ப் ஸ்காட் அவர்கள் என்னுடைய முதலாளியாக இருந்தார். அவர் கூறினார்... நான் போகத் தொடங்கினேன். அவர், "பில்லி-?” என்றார். நான். “ஆம்,” என்றேன். “நீ இவ்விடத்தை விட்டு போவதற்கு முன்னால், நான் இங்கே உனக்காக ஒரு கடிதத்தை கொண்டுள்ளேன்,” என்றார். நான், “சரி, ஹெர்பி. நான் ஒரு நிமிடத்தில் அதை பெற்றுக் கொள்வேன்,” என்றேன். 87. எனவே நான் என்னுடைய மற்ற அலுவல்களைச் செய்வதற்காக சென்று விட்டேன், நான் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். எனவே நான் என்னுடைய மற்ற அலுவல்களை செய்யும்படிக்குச் சென்றேன். நான் - நான் அவைகளைச் செய்த போது, நான் அந்தக் கடிதத்தை நினைவு கூர்ந்தேன். நான் சென்று அதைப் பெற்றுக் கொண்டு அதை திறந்துப் பார்த்தேன். அதில், "அன்புள்ள திரு. பிரான்ஹாம்,” என்றிருந்தது, பாருங்கள், “என்னுடைய பெயர் நெய்ல். நான் திருமதி.ஹரல்ட் நெய்ல். நாங்கள் சவுத் பாஸ்டன் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் வசிக்கிறோம்,” என்றிருந்தது. மேலும், “நாங்கள் விசுவாசத்தின்படி மெதொடிஸ்ட். நான், நீங்கள் எழுதிய "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்,” என்ற ஒரு சிறு புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது, ஒரு சிறு துண்டுப் பிரதி. நாங்கள் எங்களுடைய வீட்டில் அன்றொரு இரவில் ஜெபக் கூட்டத்தைக் கொண்டிருந்தோம். நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபித்து, அந்த ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதாக (success) நாங்கள் உங்களைக் குறித்து கேள்விபட்டோம்,” என்றிருந்தது. மேலும், "எனக்கு பெரும் வேதனை அனுபவித்து வரும் 15 வயதான ஒரு மகள் இருக்கிறாள்,” என்றிருந்தது. "அவள் உபத்திரவத்தின் காரணமாக படுத்த படுக்கையாய் இருக்கிறாள். எப்படியோ, நீங்கள் வந்து இந்தச் சிறு பெண்ணுக்காக ஜெபிக்க வேண்டுமென்ற எண்ணத்தை என்னால் என் மனதிலிருந்து எடுத்துப் போட முடியவில்லை. நீங்கள் தயவு செய்து அதை செய்வீர்களா-? உங்கள் உண்மையுள்ள திருமதி.ஹொல்டு நெயில், சவுத் பாஸ்டன், இண்டியானா,” என்றிருந்தது. நான், "நீங்கள் அறிவீர்கள், அது தான் அந்த சிறு பெண். அது அவள் தான்,” என்றேன். 88. நான் வீட்டிற்குச் சென்று என் தாயிடம் கூறினேன், அதைக் குறித்து அவர்கள் இடம் கூறினேன். நான், "அது - அது அந்தச் சிறு பெண் தான்,” என்றேன். பிறகு அந்த இரவில் நான் சபையாரிடம் அதைக் கூறினேன். நான், "அந்த- அந்த- அந்த- அந்த இடம் இங்கு தான் உள்ளது,” என்றேன். நான், “சவுத் பாஸ்டன் (South Boston) எங்குள்ள என்று யாருக்காவது தெரியுமா-?” என்ற கேட்டேன். 89. சகோ.ஜார்ஜ் ரைட், உங்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும், அவர், "சகோ.பிரான்ஹாம், அது தெற்கில் உள்ளதென்று நான் எண்ணுகிறேன்,” என்றார். 90. எனவே அடுத்த நாள், என்னுடைய இரண்டு நண்பர்களும், இப்பொழுது இங்கு இருக்கிற என் மனைவியும், டெக்ஸாஸிலிருந்து ஒரு மனிதனும் அவருடைய மனைவியும். அவர்கள், அவர்களுடைய பெயர்.பிரேஸ், எட்-பிரேஸ். அவர் இப்பொழுது இங்கே மில்டௌனுக்கு கீழே வசிக்கிறார், அவர் ஒரு விவசாயி. அவர் மேற்கில் ஒரு பண்ணையில் வேலை பார்ப்பவராக இருந்தார். அவர் இங்கே சபைக்கு அருகில் வசிக்கும்படி வந்தார். நான் அவருடைய மனைவிக் காக ஜெபித்தேன், அவள் காசநோயிலிருந்து (tubercular) சுகமடைந்தாள். எனவே அவர் இது சம்பவிக்கிறதா என காண விரும்பினார். நான், “நீர் என்னுடன் வந்து அது அப்படியே அதே வழியில் சம்பவிக்கிறதா இல்லையா என்பதைப் பாரும்,” என்றேன். எனவே அந்த ஸ்திரீயாகிய திருமதி - திருமதி.பிரேஸ் ஒரு போதும் தரிசனத்தைக் கண்டு இருக்கவில்லை, எனவே என்னுடைய மனைவி என்னுடன் வந்தாள். அங்கே அந்தச் சபையில் வயதான மூப்பனாய் இருந்த சகோ.ஜிம் வைஸ்ஹர்ட், ஞாபகம் கொள்ளுங்கள், அவர் அதைக் காணும்படி விரும்பினார். நான் அப்போது ஒரு சிறு பழைய உந்து வண்டியை கொண்டு இருந்தேன், நான் அவர்கள் எல்லாரையும் அங்கே கூட்டினேன். 91. நாங்கள் நியூ ஆல்பெனிக்குக் கீழே சென்றோம். நான் இந்த அடையாளத்தை கண்டு பிடித்தேன், அது சவுத் பாஸ்டன் அல்லவென்றும், அது நியூ பாஸ்டன் என்றும் கண்டு கொண்டோம். என்வே பிறகு நான் எங்கு போக வேண்டுமென்று தெரியாமல் நான் ஜெபர்ஸன்வில்லுக்கு திரும்பி வந்து யாரோ ஒருவரிடம் கேட்டேன். யாரோ ஒருவர் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்றார், அவர்கள், "சவுத் பாஸ்டன், ஹென்றிவில்லுக்கு மேலே உள்ளது,” என்றனர். 92. எனவே நான் - நான் ஹென்றிவில்லுக்குச் சென்று, அங்கே அவர்களிடம் கேட்டேன். அவர்கள், "இந்தப்பாதையில் திரும்புங்கள். அது ஏறக்குறைய 15 மைல் தூரத்தில் உள்ளது. இங்கே இந்தக் குமிழ்களில் (knobs) திரும்பினால், நீங்கள் ஒரு சிறு இடத்தை கண்டு பிடிப்பீர்கள். நீங்கள் அதை இழந்துவிட வாய்ப்பு உள்ளதாகையால் கவனமாக இருங்கள்,” என்றனர், "ஏனெனில் அதில் ஒரு சரக்கு விற்பனை கடை இருக்கும். இந்த கடையின் பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் உள்ளது, ஒவ்வொன்றும் அதில் உண்டு. சவுத் பாஸ்டன் இந்த குமிழ்களில் தான் உள்ளது,” என்றனர். அங்கே அந்த குமிழ்கள் 17,000 ஏக்கர் பரப்பில் உள்ளது, நீங்கள் பாருங்கள். இது அங்கே மலைகளில் அதற்குப் பின்னால் உள்ளது. 93. எனவே நாங்கள் நெடுக ஓட்டிக் கொண்டே சென்றோம். உடனடியாக நான் உண்மையிலேயே வினோதமான ஒன்றை உணர்ந்தேன். 5 அல்லது 6 மைல்கள் ஒட்டிச் சென்ற பின் நான் உண்மையிலேயே வினோதமான ஒன்றை உணர்ந்தேன். நான், "எனக்குத் தெரியாது,” என்றேன். அவர்கள், "என்ன காரியம்,” என்று கேட்டனர். 94. நான், "என்னுடன் பேசுகிற அந்த ஒன்று, என்னுடன் பேச விரும்புகிறது என்று நான் நம்புகிறேன், எனவே நான் காரை விட்டு வெளியே செல்ல வேண்டியதாய் இருக்கிறது,” என்றேன். 95. எனவே நான் காரை விட்டு வெளியேறினேன். ஸ்திரீகள், ஸ்திரீகளின் மடிகளில் (lap) உட்கார்ந்து கொண்டு இருந்தனர், நீங்கள் அறிவீர்கள், மற்றும் ஒவ்வொன்றும், அந்த சிறு பழைய உந்து வண்டி. நான் அந்தக் காருக்கு வெளியே வந்து, அந்த காரைச் சுற்றிச் சென்று அதற்குப் பின்னால் சென்றேன். நான் என்னுடைய தலையைத் தாழ்த்தி, அந்த காரின் பின்பக்கத்தில் உள்ள தாங்கியின் (bumper) மீது என் காலை வைத்தேன். மேலும் நான், "பரலோக பிதாவே, உம்முடைய ஊழியக்காரன் அறிய வேண்டியது என்ன-?” என்றேன். நான் ஜெபித்தேன். எதுவும் சம்பவிக்கவில்லை. நான் ஒரு சில நிமிடங்கள் காத்திருந்தேன். "நல்லது, அவர்.....,” என்று நான் நினைத்தேன். வழக்கமாக அதைப் போன்ற ஜனக்கூட்டமுள்ள இடத்தில், நான் தனியாக நிற்க வேண்டியதாய் இருந்தது. எனவே நான் ஒரு சில நிமிடங்கள் காத்திருந்தேன். 96. நான் மற்றவர்களால் அங்கே நோக்கிப் பார்க்கும்படியாக, மற்றவர்களால் கவரும்படியாய் இருக்க நேர்ந்தது. நான், “நல்லது, இங்கே பாருங்கள், இங்கே அந்தப் பழைய சபை இருக்கிறது,” என்று சிந்திக்க நேர்ந்தது. நீங்கள் எப்பொழுதாவது.., அது பங்கர் ஹில் சபை. நான் பக்கவாட்டில் பங்கர் ஹில் கிறிஸ்தவ சபையை நோக்கிப் பார்த்தேன், அங்கே கல்லறைத் தோட்டத்தில் இருந்த கல்லறைக் கற்கள் சரியாக சபைக்கு முன்னே இருந்தன. 97. நான் அங்கே சென்றேன். நான், “இப்பொழுது நீங்கள் அனைவரும் அந்தக் கடிதங்களைப் பெற்றுள்ளீர்கள்,” என்றேன். நான் என்னுடைய ஜீவியத்தில் அந்த தேசத்தில் அதற்கு முன்பாக இருந்ததில்லை. அங்கே மேலே எவ்விடத்திலும் நான் என் ஜீவியத்தில் இருந்ததில்லை. மேலும் நான், "அந்தப் பெயர்களும், எண்களும் உங்களுக்குத் தெரியும், நீங்கள் இங்கே வந்து இந்த கல்லறைக் கல்லில் (tomb-stone) அதே காரியங்கள் இருக்கிறதா இல்லையாவென்று பாருங்கள்,” என்றேன். அது அங்கே அப்படியே மிகச்சரியாக இருந்தது. நான், "இது தான் அது. நாம் இப்பொழுது சரியான பாதையில் இருக்கிறோம்,” என்றேன். மேலும் நான், "அது கர்த்தருடைய தூதனாகும்,” என்றேன். பாருங்கள், நான் சரியாக அதைக் கடந்து சென்றேன், எனக்கு அது தெரியாது. எனவே, ஓ, அவர் பரிபூரணமாக இருக்கிறார். 98. எனவே நாங்கள் காரை ஓட்டிச் சென்றோம். நான் ஒரு மனிதனை நேரடியாக சந்தித்து, "ஐயா, சவுத் பாஸ்டன் எங்குள்ளது என்று உங்களால் என்னிடம் கூற முடியுமா-?” என்று கேட்டேன். 99. அவர், "நீங்கள் வலப்புறத்திற்கு சென்று, பின்னர் இடப்புறத்திற்கு மெல்ல முன்னேறுங்கள், நீங்கள் அறிவீர்கள், அதைப் போன்று தொடர்ந்து," என்றார். நாங்கள் அப்படியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். 100. எனவே அதற்குப் பிறகு, நான் ஒரு சிறிய இடத்திற்கு வந்து சேர்ந்தேன் என்பதைக் கவனித்தேன், நாங்கள் அங்கு வந்தோம். அது ஒரு வகையான, ஒரு சிறு கிராமம் அதிலிருந்தது, அதைப் போன்று நான்-நான் நோக்கிப் பார்த்தேன், நான், “இது தான் அது. இது தான் அது,” சரியாக அங்கே இருக்கிறது என்றேன். நான், "அங்கே அது இருக்கிறது. அங்கு தான் அந்த மஞ்சள்நிற சரக்கு விற்பனை கடை இருக்கிறது,” என்றேன். நான், "இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள். ஒரு மனிதன் ஒரு நீலநில மேற்சட்டையுடனும், ஒரு வெண்ணிற சொரசொரப்பான பஞ்சு துணி.., அல்லது மஞ்சள் நிற சொரசொரப்பான பஞ்சு துணியினாலான தொப்பியை அணிந்து, ஒரு வெள்ளை மீசையுடனும் அங்கிருந்து வெளியே வந்து நான் எங்கு போக வேண்டுமென்றும் என்னிடம் கூற வேண்டியதாய் இருக்கிறது. அப்படி சம்பவிக்கவில்லை என்றால், நான் ஒரு பெரிய கதை கூறுபவனாக இருப்பேன்,” என்றேன். 101. எனவே அவர்களெல்லாரும் காத்திருந்தனர். நான் அந்த இடத்திற்கு முன்பு றத்தில் காரை ஓட்டிச் சென்றேன். நான் அதற்கு முன்னே காரை ஓட்டிச் சென்ற மாத்திரத்தில், நீல நிற மேற்சட்டையும், மஞ்சள் நிற சொரசொரப்பான பஞ்சு துணியிலான தொப்பியும் அணிந்து, வெண்ணிற மீசையுடன், நான் கூறிய அந்த மனிதன் வெளியே வந்தான். திருமதி.பிரேஸ் அது அதைப் போன்றே சம்பவித்து விட்டதை பார்த்து காரிலேயே மயக்கமடைந்தாள். நான், "ஐயா, ஹரோல்டு நெயில் எங்கிருக்கிறார் என்பதை நீங்கள் என்னிடம் கூறுங்கள்,” என்றேன். அவர், “சரி, ஐயா,” என்றார். “நீங்கள் தெற்கிலிருந்தா வருகிறீர்கள்-?” என்றார். நான், "ஆம், ஐயா,” என்றேன். 102. "நீங்கள் அதை தாண்டி வந்து விட்டீர்கள். ஏறக்குறைய அரை மைல் தூரம் கீழே சென்று, முதலாவது வரும் சாலையில் இடது பக்கத்திற்கு நீங்கள் திரும்புங்கள். நீங்கள் செல்லும் போது, நீங்கள் ஒரு பெரிய சிவப்பான களஞ்சியத்தை கண்டு பிடிப்பீர்கள், அந்த சிவப்பான கஞ்சியத்தில் நீங்கள் திரும்புங்கள்,” என்றார். அந்த சிறிய ஒடுக்கமான சந்து போன்ற சாலையில் திரும்பினால், உங்கள் வலப்பக்கத்தில் உள்ள இரண்டாவது வீடு," என்றார். நான், "சரி, ஐயா,” என்றேன். அவர், "ஏன்-?” என்றார். நான், "அவர் வேதனைப்படுகிற ஒரு மகளைக் கொண்டு உள்ளார். இல்லையா-?” என்றேன். "ஆம், ஐயா, அவர் அந்த மகளைக் கொண்டு இருக்கிறார்,” என்றார். 103. நான், "கர்த்தர் அவளை சுகமாக்கப் போகிறார்,” என்றேன். அந்த வயதான மனிதன் அழத் தொடங்கினான். பாருங்கள்-? அவன் அறிந்து இருக்கவில்லை . எனவே அவனும் தரிசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவனாய் இருந்தான். அவன் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கவில்லை. 104. நான் சுற்றிலும் திரும்பினேன். திருமதி.நெயில் மீண்டும் புதிய ஊக்கம் பெற்றவர்களாக நாங்கள் கண்டோம். அங்கே சென்று, அந்த வேலிக்குள் நடந்தோம். காரை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினோம். அந்த இடத்திற்குச் செல்லத் தொடங்கினோம்... அந்த இடம் எங்குள்ளதென்று நீங்கள் அறிவீர்கள். பருமனான ஒரு வாலிப ஸ்திரீ வாசலுக்கு வந்தாள். நான், "அவள் அங்கே இருக்கிறாள்,” என்றேன். பாருங்கள்-? எனவே அவள், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-?” என்றாள். நான், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்-?" என்றேன். "நான் - நான் சகோதரன் பில்,” என்று நான் கூறினேன். 105. அவள், "ஓ, அது நீங்கள் தான் என்று நான்-நான்-நான் எண்ணினேன்," என்றாள். அவள், "என்னுடைய கடிதம் உங்களுக்குக் கிடைத்ததா-?" என்ற கேட்டாள். நான், "ஆம், பெருமாட்டியே, எனக்குக் கிடைத்தது,” என்றேன். அவள், "நான் திருமதி.நெயில்,” என்றாள். 106. நான், "நல்லது, திருமதி.நெயில், நான் உங்களை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் உங்களுடைய மகளுக்காக ஜெபிக்கும்படி என்னுடன் வந்துள்ள ஒரு சிறுகூட்டம்,” என்றேன். அவள், “சரி,” என்றாள். நான், “அவள் சுகமடையப் போவது முடிவு செய்யப்பட்டு விட்டது,” என்றேன். 107.அவள், “என்ன-?” என்றாள். அவளுடைய உதடுகள் நடுங்கத் தொடங்கின. அவள் அழத் தொடங்கினாள். 108. நான், "ஆம், சீமாட்டியே,” என்றேன். எனக்குத் தெரியாது; நான் அந்த ஸ்திரீக்காக நின்று விடவில்லை. 109. நான் சரியாக முகப்பு கூடத்தில் (Hall) நடந்தேன், என் கூட்டத்தாரும் என்னை பின் தொடர்ந்தனர். நான் முகப்புக் கூடத்தின் வலப் பக்கமாக கதவைத் திறந்த போது, (பெரிய, பழைய, நாட்டுப்புற வீடு) அந்தக் கதவைத் திறந்த போது, சுவரில் "தேவன் நம் வீட்டை ஆசீர்வதிப்பாராக,” என்ற அடையாளக் குறிப்பு சிவப்பு நிற சித்திரத்தில் மஞ்சள் நிறத்தாளில் இருந்தது; அந்தப் பழைய பித்தளை பதிக்கப் பட்ட கட்டில்; கனமான அடுப்பு என்னுடைய இடப்பக்கத்தில் இருந்தது. அங்கே ஒரு சிறு கட்டில் இருந்தது, அதில் இந்த பையனை போன்ற தோற்றமளித்த சிறு பெண் படுத்திருந்தாள். 110. இப்பொழுது ஏதோவொன்று சம்பவித்தது. நான் அந்த அறையின் மூலையில் இருந்தவாறே, அந்த கட்டிலுக்குச் செல்லும் என்னுடைய சரீரத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தேன். நான் என்னுடைய கரங்களை கர்த்தர் சொன்ன விதமாக மிகச் சரியாக அவளுடைய வயிற்றுக்குக் குறுக்கே வைத்தேன். நான் அப்படிச் செய்தபோது, திருமதி. நெயில் அறையில் நடந்து வந்து அதைக் கண்டு, மீண்டும் மயக்கமுற்று தரையில் சாய்ந்தாள். அவள் ஒரு பெலவீனமான ஸ்திரீயாக இருந்ததால், மீண்டும் மயக்கமுற்று தரையில் சாய்ந்தாள். சகோ.நெயில் அவளுடைய மயக்கம் தெளிவடைய முயற்சித்துக் கொண்டிருந்தார். வயதான சகோ.ஜிம் அங்கே நின்று, "கர்த்தரைத் துதியுங்கள்,” என்று கூறினவாறே அவருடைய கரங்களை ஒன்றாக பற்றிப் பிடித்துக் கொண்டார், அவர் எவ்வாறு செயல்பட்டார் என்பதை மாத்திரம் நீங்களெல்லாரும் அறிந்திருந்தால். எனவே பிறகு நான் அதை நோக்கிக் பார்த்து, அதைக் கண்டேன். 111. நான் என்னுடைய கரங்களை இதைப் போன்ற அவளின் மீதோ அல்லது அவளுடைய வயிற்றின் குறுக்கேயோ வைத்தேன். நான், "கர்த்தாவே, நான் செய்யும்படி தேவன் கூறினார் என்று நான் எண்ணுகிறபடியே, உம்முடைய கட்டளைபடியே நான் இதைச் செய்கிறேன்,” என்றேன். ஏறக்குறைய அந்த நேரத்தில், அவள் அழத் தொடங்கி குதித்தெழுந்தாள். 112. மேலும் அவர்கள் அப்படியே திருமதி.நெயிலின் காலை பிடித்துக் கொண்டனர். அவள் தன்னுடைய மயக்கமுற்ற நிலையிலிருந்து விழித்து எழுந்தாள். 113. அந்த சிறு பெண் படுக்கையை விட்டு குதித்தெழுந்த போது, தரிசனத்தில் காட்டப்பட்ட அதே விதமாக அப்படியே மிகச் சரியாக, அங்கே அவளுடைய இரவு உடுப்பின் கால் பகுதி வலது கால் பகுதிக்கு வந்தது. அங்கே ஒரு பையனுக்கு இருப்பதற்கு மாறாக, ஒரு சிறு பெண்ணுக்கு இருப்பதைப் போன்ற வட்ட வடிவமான முழங்கால் இருந்தது. 114. திருமதி.நெயில் மீண்டும் தரையில் சாய்ந்தாள். பாருங்கள்-? அவள் மயக்கம் அடைந்தாள். அவள் மூன்று தடவை மயக்கமுற்றாள். 115. அந்தச் சிறுபெண் அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள். அவளுடைய உடை மாற்றும் அறைக்குள் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதாள், மேலும் தன்னுடைய அகன்ற கைப்பகுதியுடைய நீளமான சட்டை (kimono) யை அணிந்து திரும்பி நடந்து வந்து, தன் தலை முடியை சீவினாள். அவளுடைய அவளுடைய ஒரு கரமானது வலது புறத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த முடமான கரத்தைக் கொண்டு தன்னுடைய தலைமயிரை வாரினாள். 116. அவள் விவாகமாகி, ஒரு கூட்டம் பிள்ளைகளைக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பெயர், இப்பொழுது அவளுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நெயிலினுடைய பெயரை யாராவது கூற முடியுமா, ஹெரால்டு நெயில். 117. அந்த தரிசனங்கள் உண்மையே. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) நான் அதை ஜனங்களாகிய உங்களிடம் எடுத்துக் கொண்டு வர முடியும், சம்பவித்த அப்படிப்பட்ட காரியங்களின் புத்தகங்கள் இடத்தை அடைக்கும் அளவுக்கு இருக்கும். இப்பொழுது, அது உண்மை, சகோதரன் வேயில். 118. நான் தவறலாம்; நான் ஒரு மனிதன். நான் ஆரம்பத்திலேயே தோல்வி உற்றவனும், கிறிஸ்துவின் ஊழியக்காரன் எனப்படுவதற்கு மிகவும் அற்பமான ஒரு பதிலாளாக (substitute) இருக்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம்- ஆசிரியர்) 119. (சகோதரன் வேயில் "ஸ்பெல் மெரல்-?” என்று கூறுகிறார்) மெ-ர, இரண்டு எல் (Merrell). (“அது அங்கே இருந்ததென்று நான் எண்ணுகிறேன். ஆம்,”) இப்பொழுது, அங்கே எல்லாம் இருக்கிறதா-? ("நீ-லா-?) நெ-யி-ல் (“பிரேஸ், பி-ரே-ஸ்-?) பிரே-ஸ், அட், அட் பிரேஸ் ("இப்பொழுது நான் அவை எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டேன் என்று எண்ணுகிறேன். ஒரு நிமிடம் கிரஹாம் ஷெல்லிங்-?”) கிரஹாம், கி-ர-ஹா-ம். (அது என்(ய்) ஸ்-நெ - இரண்டு எல் (ப்), ல்-லி-ங். ("ஓ, ஸ்நெல்லிங்”) இப்பொழுது நாம் அதைப் பெற்றுக் கொண்டோம்.